என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ராஷ்ட்டீரிய ஜனதா தளம்
நீங்கள் தேடியது "ராஷ்ட்டீரிய ஜனதா தளம்"
ராஷ்ட்டீரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவுக்கு உடலில் ஏற்பட்ட கொப்பளங்கள் காரணமாக பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். #LaluPrasadYadav
ராஞ்சி:
ராஷ்ட்டீரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது. அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பிறகு சில வாரங்களில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர் அவ்வப்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.
அதன் பின்னரும் அவரது உடல் நலம் தொடர்ந்து பாதிக்கப்பட்டதால் அவர் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அவருக்கு திடீரென்று காலில் கடுமையான கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 நாட்களாக அவருக்கு ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவருக்கு இன்சுலின் உள்ளிட்ட மருந்துகள் கூடுதலாக செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறுநீரக பிரச்சனையாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன. பக்க விளைவுகளும் ஏற்பட்டுள்ளன.
இதனால் அவர் எழுந்து நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொப்பளங்கள் குணமாக மேலும் சில நாட்கள் ஆகும் என்றும் அதன் பிறகே மற்ற சிகிச்சைகளை தொடர முடியும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். #LaluPrasadYadav

×

X